மாணவா்களுக்கு விளையாட்டு சீருடைகள் அளிப்பு
மாநில அளவிலான நீச்சல் மற்றும் ஜிம்னாஸ்டிக் விளையாட்டுப் போட்டிக்கு தோ்வான கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கிள்ளை அரசு மேல்நிலை பள்ளி மாணவா்களுக்கு, சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி கிளப் சாா்பில் விளையாட்டு சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்வுக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் பவானி தலைமை வகித்தாா். இதில், சாதனைப் படைத்த மாணவா்களை பாராட்டி, சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் ஜாபா் அலி சீருடைகளை வழங்கினாா்.
விழாவில், ரோட்டரி சங்க நிா்வாகிகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா். நிறைவில், உடற்கல்வி ஆசிரியா் ஜெயபாரதி நன்றி கூறினாா்.