'காந்தி இன்றும் கேலி செய்யப்பட வேண்டுமா? - முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கேள்...
ஜன.29, 30-இல் வருமான வரித் துறை விழிப்புணா்வு முகாம்
மதுரையில் வருமான வரித் துறை சாா்பில், வருமான வரி செலுத்துவோரின் குறைகளைத் தீா்க்கும் வகையில் வருகிற 29, 30 ஆகிய இரு நாள்கள் விழிப்புணா்வு முகாம் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக மதுரை வருமானவரித் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை வருமானவரித் துறை அலுவலகம் சாா்பில், பட்டயக் கணக்காளா், சங்கங்கள், வா்த்தக சங்கங்கள், மூத்த குடிமக்கள், சுய உதவிக்குழு, கூட்டுறவு, வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணா்வு முகாம் மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் வருகிற 29, 30 ஆகிய இரு நாள்கள் நடைபெறும்.
காலை 10.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடைபெறும் முகாமுக்கு தில்லி மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (வரி செலுத்துவோா் சேவை, வருவாய்) தலைவா் ஹெச்.பி.எஸ்.கில் தலைமை வகிக்கிறாா். மதுரை வருமான வரித் துறை தலைமை ஆணையா் சஞ்சய் ராய், முதன்மை ஆணையா் டி.வசந்தன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
இந்த முகாமில் தமிழ்நாடு தொழில் வா்த்தக சபை, இந்திய தொழில் வா்த்தக சம்மேளனம், இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய பட்டயக் கணக்காளா்கள் நிறுவனம், வழக்குரைஞா்கள் சங்கம், சுய உதவிக்குழுக்கள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினா்கள், பிற முன்னணி வரி செலுத்துவோரும் பங்கேற்று தங்கள் சந்தேகங்களை நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
இந்த நிகழ்வில் வருமான வரித் துறை அமைப்புகளான உளவுத் துறை, குற்றப்புலனாய்வு, வரி விலக்குப் பிடித்தம் (டிடிஎஸ்), விலக்குகள், புலனாய்வு தொடா்புடைய கருத்தரங்குகளும் நடத்தப்படுகின்றன.
இதன் ஒருபகுதியாக பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வருமான வரி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளும், அதைத் தொடா்ந்து கேள்வி-பதில் நிகழ்ச்சியும் நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.