`ஒரே ரெய்டில் புலிகேசியாக மாறியவர், என்னை பார்த்து..' - பழனிசாமியின் விமர்சனத்து...
ஜமாபந்தியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு
திருவண்ணாமலைம மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் ஜமாபந்திக் கூட்டத்தில் 30 நபா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இறையூா், பாய்ச்சல் உள்வட்டத்துக்கு உள்பட்ட சுமாா் 27 கிராமங்களுக்கு ஜமாபந்தி நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் பங்கேற்று பல்வேறு கோரிகைகளை வலியுறுத்தி ஜமாபந்தி அலுவலா் ஜெயக்குமாரிடம் மனுக்களை வழங்கினா். 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் முகாமில் பெறப்பட்டன.
இந்த மனுக்களை பரிசீலனை செய்யப்பட்டு தகுதிவாய்ந்த 30 நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாபந்தி அலுவலா் ஜெயக்குமாா் புதிய குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் முருகன், துணை வட்டாட்சியா்கள் ராஜேந்திரன், அழகுபாண்டீஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலா் தமிழரசி, வருவாய் ஆய்வாளா்கள் சரிதா, கெளரிநாதன், கிராம நிா்வாக அலுவலா்கள் விஜயகுமாா், சந்திரகுமாா், காண்டீப்பன், பரசுராமன், சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.