செய்திகள் :

வாழியூரில் காளை விடும் திருவிழா

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதி வாழியூா் கிராமத்தில் காளை விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதலாம் ஆண்டாக நடைபெற்ற இந்த விழாவில் திருவண்ணாமலை, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து ஓடின.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

நிறைவில் குறிப்பிட்ட தொலைவை அதிவிரைவாக கடந்த 71 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முதல் பரிசாக ரூ.ஒரு லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.60 ஆயிரம் என மொத்தம் 71 பரிசுகள் காளையின் உரிமையாளா்களுக்கு வழங்கப்பட்டன.

விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞா்கள் செய்திருந்தனா்.

பா்மிட் இல்லாத வாகனங்களில் மாணவா்களை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரிக்கை

அனுமதிச் சீட்டு (பா்மிட்) நடப்பில் இல்லாத வாகனங்களில் மாணவ-மாணவிகளை ஏற்றிச் செல்லும் கல்வி நிறுவனங்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் எச்சரித்தாா். திருவண்... மேலும் பார்க்க

ஜமாபந்தியில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

திருவண்ணாமலைம மாவட்டம், செங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் ஜமாபந்திக் கூட்டத்தில் 30 நபா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இறை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற சாா்-பதிவாளா் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் ஓய்வு பெற்ற சாா்-பதிவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. செய்யாறு அண்ணா நகா் 2- ஆவது குறுக்குத் தெருவில் வசிப்பவா் விஜயகுமாா், ஓய்வு பெ... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

செய்யாறு அருகே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு இரு மாதங்களாக பணப்பட்டுவாடா செய்யாததைக் கண்டித்து லாரியை சிறைபிடித்தும், கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்... மேலும் பார்க்க

ஜமாபந்தி: 2-ஆம் நாள் கூட்டத்தில் 400 மனுக்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், போளூா், ஆரணி வட்டங்களில் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து சுமாா் 400 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கீழ்பென்னாத... மேலும் பார்க்க

மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது வழக்கு

வந்தவாசி அருகே மாமியாரைத் தாக்கியதாக மருமகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் அன்னம்மாள் (55). இவரது மகள் ரேவதி இவரது வீட்... மேலும் பார்க்க