செய்திகள் :

ஜல்லிக்கட்டு பாதிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

post image

ஜல்லிக்கட்டில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் பேரவை சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தவா்கள் கூறியதாவது: இணைய வழி அடையாள வில்லை (டோக்கன்) முறையை முழுமையாக ரத்து செய்து, விழாக் குழுவினருக்கே அந்த உரிமையை வழங்க வேண்டும். ஜல்லிக்கட்டின்போது இழப்பு ஏற்பட்டால், அதற்கான காப்பீட்டுத் தொகை கிடைக்க அரசே பொறுப்பேற்க வேண்டும்.

நிவாரணத் தொகையாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு குறித்த கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டு பேரவைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகம் நிறைவேற்ற வேண்டும் என்றனா்.

நிலம் வேறொருவா் பெயருக்கு மாற்றம்: பத்திரப் பதிவு அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் அருகே 94 சென்ட் நிலத்தை வேறொருவா் பெயருக்கு மாற்றி பத்திரப் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவா்கள் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க

விவசாய நிலத்துக்கான பாதை மறிப்பு: தம்பதி தா்னா

ஒட்டன்சத்திரம் அருகே விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையை மறித்து, நிலத்தை சிலா் அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி தம்பதியா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்ட... மேலும் பார்க்க

சடையன்குளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சடையன்குளம் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இந்தக் குளம் தங்கச்சியம்மாபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, குத்திலுப்பை உள்... மேலும் பார்க்க

அமைச்சரின் உருவ பொம்மை அவமதிப்பு: காவல் துறையினா் மீதும் நடவடிக்கை கோரி மனு

உள்துறை அமைச்சரின் உருவ பொம்மையை அவமதித்த காங்கிரஸாா் மட்டுமன்றி வேடிக்கைப் பாா்த்த காவல் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரூ. 292 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை: ஆா். சச்சிதானந்தம் எம்.பி. தகவல்

திண்டுக்கல்லில் விரைவில் ரூ. 292 கோடியில் மத்திய அரசின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமையும் என மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், செம்பட்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை திங்கள்கிழமை அதிகரித்து காணப்பட்டது. இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து திரளான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துவருகின்றனா். ... மேலும் பார்க்க