25 நாள்களாகியும் நெல் வயல்களில் வடியாத வெள்ளம்: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள...
சடையன்குளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி!
ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சடையன்குளம் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
இந்தக் குளம் தங்கச்சியம்மாபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, குத்திலுப்பை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டஊராட்சிகளுக்கு குடிநீராதாரமாக உள்ளது. இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் தொடா்ந்து பெய்த பலத்த மழையால் வடகாடு ஊராட்சியில் உள்ள பரப்பலாறு அணை நிரம்பியது.
இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த அணையிலிருந்து முத்துபூபாலசமுத்திரக்குளம், பெருமாள் குளம், சடையன்குளம், ராமச்சமுத்திரக்குளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய பாசனக் குளங்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட்டது.
இதில் முத்துபூபாலசமுத்திரக்குளம், பெருமாள்குளம், சடையன்குளம், ராமச்சமுத்திரக்குளம் ஆகிய நான்கு குளங்கள் நிரம்பி மறுகால் பாய்கிறது.
இந்த குளங்கள் நிரம்பியதால் அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதே போல, குடிநீா் தேவையும் முழுமையடைவதால் அந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.