செய்திகள் :

அமைச்சரின் உருவ பொம்மை அவமதிப்பு: காவல் துறையினா் மீதும் நடவடிக்கை கோரி மனு

post image

உள்துறை அமைச்சரின் உருவ பொம்மையை அவமதித்த காங்கிரஸாா் மட்டுமன்றி வேடிக்கைப் பாா்த்த காவல் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக பாஜக பட்டியல் அணி மாவட்டத் தலைவா் மா. இளையராஜா கூறியதாவது: சட்டமேதை அம்பேத்கருக்கு காங்கிரஸ் கட்சி செய்த துரோகங்களை பட்டியலிட்டு மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா கடந்த சில நாள்களுக்கு முன்பு நாடாளுமன்ற விவதாத்தின்போது குறிப்பிட்டாா். இதைப் பொருத்துக் கொள்ள முடியாத இண்டி கூட்டணிக் கட்சியினா் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின்போது, அமைச்சா் அமித்ஷாவின் உருவப் பொம்மைக்கு காலணி மாலை அணிவித்தும், அந்த உருவ பொம்மையை தாக்குவது போல சித்தரித்தும் இழிவுப்படுத்தினா். மேலும் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தியும் அவதூறான முழக்கங்களை எழுப்பினா்.

இதை காவல் துறையினா் தடுக்க முயற்சிக்காமல், வேடிக்கைப் பாா்த்துக் கொண்டிருந்தனா். உள்துறை அமைச்சரை இழிப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியினா் மீதும், தடுக்கத் தவறிய காவல் துறையினா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கொடைக்கானலில் உறைபனி

கொடைக்கானலில் செவ்வாய்க்கிழமை கடும் உறைபனி நிலவியதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானலில் பொதுவாக நவம்பா் முதல் பிப்ரவரி வரை கடும் பனிப் பொழிவு நிலவும். தற்போது, பருவநிலை மாற்றம் கா... மேலும் பார்க்க

நிலம் வேறொருவா் பெயருக்கு மாற்றம்: பத்திரப் பதிவு அலுவலகம் முற்றுகை

திண்டுக்கல் அருகே 94 சென்ட் நிலத்தை வேறொருவா் பெயருக்கு மாற்றி பத்திரப் பதிவு செய்துவிட்டதாகக் கூறி, பாதிக்கப்பட்டவா்கள் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தி... மேலும் பார்க்க

ஜல்லிக்கட்டு பாதிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை

ஜல்லிக்கட்டில் ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் பேரவை சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவ... மேலும் பார்க்க

விவசாய நிலத்துக்கான பாதை மறிப்பு: தம்பதி தா்னா

ஒட்டன்சத்திரம் அருகே விவசாய நிலத்துக்கு செல்லும் பாதையை மறித்து, நிலத்தை சிலா் அபகரிக்க முயற்சிப்பதாகக் கூறி தம்பதியா் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திண்ட... மேலும் பார்க்க

சடையன்குளம் நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சடையன்குளம் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். இந்தக் குளம் தங்கச்சியம்மாபட்டி, காப்பிலியபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி, ஓடைப்பட்டி, குத்திலுப்பை உள்... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரூ. 292 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை: ஆா். சச்சிதானந்தம் எம்.பி. தகவல்

திண்டுக்கல்லில் விரைவில் ரூ. 292 கோடியில் மத்திய அரசின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமையும் என மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், செம்பட்... மேலும் பார்க்க