‘செட்’ தோ்வு டிஆா்பி மூலமே நடத்தப்படும்: அமைச்சா் கோவி.செழியன்
திண்டுக்கல்லில் ரூ. 292 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை: ஆா். சச்சிதானந்தம் எம்.பி. தகவல்
திண்டுக்கல்லில் விரைவில் ரூ. 292 கோடியில் மத்திய அரசின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமையும் என மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், செம்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்துக்கு நிலக்கோட்டை வடக்கு ஒன்றிய திமுக செயலா் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட பிரதிநிதி அண்ணாத்துரை வரவேற்றாா். கூட்டத்தில், மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் பேசியதாவது:
திண்டுக்கல்லில் விரைவில் ரூ. 292 கோடியில் மத்திய அரசின் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமையவுள்ளது. இதேபோல, திண்டுக்கல்லிலிருந்து சபரிமலைக்கு புதிய ரயில் பாதையும், திண்டுக்கல்- காரைக்குடி இடையே ரயில் பாதையும் அமையும். இதற்கான அனைத்துப் பணிகளும் விரைவில் தொடங்கும் என்றாா் அவா்.
கூட்டத்தில், திமுக நிா்வாகிகள் ஆரோக்கியம், அழகேசன், சங்கா், பொன்னையா, காட்டுராஜா, கணேசன், பெனிட், பதினெட்டாம்படியான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.