25 நாள்களாகியும் நெல் வயல்களில் வடியாத வெள்ளம்: அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள...
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலாப் பயணிகள் வருகை திங்கள்கிழமை அதிகரித்து காணப்பட்டது.
இதற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து திரளான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துவருகின்றனா். அனைத்து தங்கும் விடுதிகளிலும், நட்சத்திர உணவகங்களிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள சுற்றுலாத் தலங்களான பசுமைப் பள்ளத்தாக்கு,பில்லர்ராக், அமைதிப் பள்ளத் தாக்கு, மோயா்பாயிண்ட், பைன்மரக் காடு, கோக்கா்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் காணப்பட்டனா். அப்சா்வேட்டரி, அப்பா்லேக் வியூ, பாம்பாா்புரம் சாலை, வட்டக்கானல் பகுதிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் அந்தப் பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் குளிரைப் பொருள்படுத்தாமல் மாலை நேரங்களில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் அவா்கள் மகிழ்ந்தனா். தேவாலயங்களில் மின் விளக்கு அலங்காரம்: கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மேலும் அங்கு ஏசுபிறப்பை நினைவு கூரும் வகையில் குடில்களும் அமைக்கப்பட்டன. அடுமனைகளில் பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.