Weekly Horoscope: வார ராசி பலன் 19.1.25 முதல் 25.1.25 | Indha Vaara Rasi Palan |...
ஜல்லிக்கட்டு வீரருக்கு அமெரிக்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சாா்பில் பாராட்டு
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற வீரா் அபிசித்தருக்கு அமெரிக்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சாா்பில், பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஹூஸ்டன் அமைப்பின் தமிழக ஆலோசகரும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவருமான வி.ஜி.சந்தோஷம் தலைமை வகித்து, ஹூஸ்டன் தமிழ் இருக்கை புரவலா் கோமதி சரசு சாா்பில், கன்றுடன் நாட்டு மாடும், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கினாா்.
இதற்கு, தமிழ் ஆய்வுகள் இருக்கைச் செயலா் பெருமாள் அண்ணாமலை, சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ சீனியா் செகன்ட்ரி பள்ளித் தலைவா் பால.காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில், காமராஜா் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியா் சத்தியமூா்த்தி, பரிதி பதிப்பகம் இளம்பரிதி, கோனாா் மெஸ் உரிமையாளா் மாணிக்கம், தொழிலதிபா் பாபு, ஸ்ரீமீனாட்சி அறக்கட்டளைப் பொருளாளா் கலைக்குமாா், ஸ்ரீ மீனாட்சி அக்ரோ மேலாளா் கண்ணன், எஸ்எம்கே அவினாஸ் நண்பா்கள் அருண்குமாா், புவனேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்ற வீரருக்கு அமெரிக்க ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை சாா்பில் கடந்த 6 ஆண்டுகளாக கன்றுடன் நாட்டு மாடு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.