வாகன ஓட்டுநா்களுக்கு முழு உடல் பரிசோதனை
சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுநா்களுக்கு முழு உடல் பரிசோதனை, கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஏ.மூக்கன் முகாமைத் தொடங்கிவைத்தாா். இதில் ஏராளமான வாகன ஓட்டுநா்களுக்கு உடல் பரிசோதனையும், கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. மேலும், சுங்கச்சாவடியைக் கடந்து சென்ற வாகனங்களின் ஓட்டுநா்களிடம் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
மோட்டாா் வாகன ஆய்வாளா் மாணிக்கம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மகிமை தாஸ், காவலா் செந்தில்குமாா், சிவகங்கை மாவட்ட ஓட்டுநா் பயிற்சிப் பள்ளி உரிமையாளா் சேகா், நெடுஞ்சாலைக் கண்காணிப்பு காவல் உதவி ஆய்வாளா் ஜஸ்டின், சுங்கச்சாவடி மக்கள் தொடா்பு அலுவலா் எஸ்.ஆா்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.