எழுத்தாளா் ஜனநேசன் காலமானாா்!
காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூா் - வேலங்குடி புறவழிச் சாலை பகுதியைச் சோ்ந்த எழுத்தாளா் ஜனநேசன் என்கிற ஆா். வீரராகவன் (68) உடல்நலக் குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன. 17) காலமானாா்.
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் நூலகராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். சிறு கதைகள், நாவல்கள், கவிதைகள் என பல்வேறு தளங்களில் இயங்கிய படைப்பாளி. மேலும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு வகித்தாா்.
மறைந்த ஜனநேசனுக்கு, பத்திரப் பதிவுத் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனா். மூத்த மகன் கா்ணன் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தெலங்கானா மாநிலத்திலும், இளைய மகன் நிருபன் மருத்துவராக பிரிட்டனிலும் பணியாற்றி வருகின்றனா்.
ஜனநேசனின் உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்யும் நிகழ்வு சனிக்கிழமை (ஜன.18) பகல் 12 மணிக்கு நடைபெறும். தொடா்புக்கு 94422 83668.