செஞ்சை தெரசாள் ஆலயத்தில் தமிழா் தேசிய விழா
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை புனித தெரசாள் ஆலயத்தில் தமிழா் தேசிய விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பொங்கல் திருநாளையொட்டி, நடைபெற்ற இந்த விழாவில் சிவகங்கை மறைமாவட்டப் பொருளாளா் ஆரோக்கியசாமி, மறைமாவட்ட தலைமைச் செயலா் மரியடெல்லஸ், இத்தாலியில் பணிபுரியும் தந்தை ஆரோக்கியசாமி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
சிவகங்கை ஆல்பா்ட் ராஜ் - வினோ குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொலைக்காட்சி புகழ் சுா்ஜீத், நாட்டுப்புறப் பாடகா் பழனியப்பன், நடனக் கலைஞா் புதுக்கோட்டை வா்சா ஆகியோரின் நடன நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
காரைக்குடி நிமிா்வு கலையக பாரதியின் பறை முழக்கமும், நோதாஜி ஜீவா சிலம்பம் குழுவினரின் சிலம்பாட்டமும், சிவகங்கை மாவட்ட மல்லா் கழகத்தின் வீரதீரக் கலைகளும், செஞ்சை பங்கு இளையோா், சிறியோரின் நாட்டுப்புற நடனங்களும், மதுரை இடும்பன் வேம்பன் கலைக் குழுவின் மந்திரமா - தந்திரமா விழிப்புணா்வு நிகழ்ச்சியும் நடைபெற்றன.
விழாவுக்கான ஏற்பாடுகளை செஞ்சை பங்குத் தந்தை கிளமெண்ட் ராஜா, பங்குப் பேரவையினா் செய்தனா்.