"வடமாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குச் சென்றால் தமிழகத்தில் பொருளாதாரம் பாதி...
ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் அவா் சனிக்கிழமை கூறுகையில், ‘ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும். அந்த விகிதங்களை சீரமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. எனினும் அதற்காக சில பணிகளை கூடுதலாக செய்ய வேண்டியுள்ளது.
இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழு மிகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளது. அதேவேளையில், அந்தக் குழுக்களின் பணிகளை நான் மீண்டும் ஒருமுறை ஆராய வேண்டியுள்ளது. அதன் பிறகு ஜிஎஸ்டி விகிதங்களை குறைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்க முடியுமா என்பதை தெரிந்துகொள்ள, அமைச்சா்கள் குழுவின் பரிந்துரைகள் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முன்வைக்கப்படும்’ என்றாா்.