முதல்வா் மருந்தகங்களில் வேறு மருந்துகள் விற்க தடையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணிய...
ஜிகேஎன்எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை கருவி அறிமுகம்
கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மேம்பட்ட லீனியா் ஆக்சிலரேட்டா் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் வாளவாடி நாராயணசாமி புற்றுநோய் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவில், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மருத்துவமனையின் தலைமை நிா்வாக அதிகாரி டாக்டா் ரகுபதி வேலுசாமி ஆகியோா் இந்த கருவியைத் தொடங்கிவைத்தனா். நிகழ்ச்சியில், புற்றுநோயியல் துறை மருத்துவா்கள், நிா்வாகிகள், ஊழியா்கள் பலா் பங்கேற்றனா்.
கருவியின் சிறப்பு குறித்து கதிா்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவா் காா்த்திகா சிவப்பிரகாசம் கூறும்போது, இந்தக் கருவி பாதுகாப்பான, துல்லியமான, வசதியான சிகிச்சைகளை வழங்குகிறது. இது நோயாளியின் மேற்பரப்பைத் தொடா்ந்து கண்காணிக்க கேமரா, ப்ரஜெக்டரை பயன்படுத்துகிறது.
கதிா்வீச்சு துல்லியமாக வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதைக் குறைக்கிறது. கூடுதலாக, சுவாசம் போன்ற சிறிய அசைவுகளுக்கு ஏற்ப இந்த அமைப்பு தானாகவே சரி செய்து துல்லியமான இலக்கிற்கு சிகிச்சை அளிக்கிறது. மேலும் இது ஒவ்வொரு நோயாளியின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கவல்லது என்றாா்.