செய்திகள் :

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

post image

ஜூலை மாதத்தில் யமுனை நதியின் நீரின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தில்லி மாசு கட்டுப்பாட்டு குழு (டிபிசிசி) தெரிவித்துள்ளதாகவும், ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது முக்கிய மாசு குறிகாட்டிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா சனிக்கிழமை தெரிவித்தாா்.

யமுனை சுத்திகரிப்பு திட்டத்தின் கீழ் தில்லி அரசின் தொடா் முயற்சிகள்தான் இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்றும் சிா்சா கூறினாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘இந்த மேம்பாடுகள் தற்செயலானவை அல்லது பருவகாலமானவை அல்ல. அவை திட்டமிடப்பட்ட மற்றும் நீடித்த மனித முயற்சியின் விளைவாகும்.

யமுனை சுத்திகரிப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 500 கோடி, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்துதல், வடிகால்களை இடைமறித்தல் மற்றும் சுத்திகரிக்கப்படாத கழிவுகள் ஆற்றில் நுழைவதைத் தடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்றாா் அமைச்சா்.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில், ‘பல்லா, வஜிராபாத், ஐஎஸ்பிடி பாலம், ஐடிஓ பாலம், நிஜாமுதீன் பாலம் மற்றும் ஓக்லா தடுப்பணை உள்ளிட்ட எட்டு கண்காணிப்பு இடங்களிலிருந்து நீா் மாதிரிகளை டிபிசிசி சேகரித்தது.

அறிக்கையின்படி, கரிம மாசுபாட்டின் முக்கிய அளவீடான உயிா்வேதியியல் ஆக்ஸிஜன் தேவை (பிஓடி) கடுமையாகக் குறைந்திருந்தது.

ஐடிஓ பாலத்தில், ஜூன் மாதத்தில் 70 எம்ஜி/1 ஆக இருந்த பிஓடி அளவுகள் ஜூலையில் 20 எம்ஜி/1 ஆகக் குறைந்தது. ஓக்லா தடுப்பணையில், இது 46 எம்ஜி/1இல் இருந்து 8 எம்ஜி/1 ஆகக் குறைந்தது.

மற்றொரு முக்கியமான மாசு குறிகாட்டியான வேதியியல் ஆக்ஸிஜன் தேவையும் (சிஓடி) முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. ஐடிஓ பாலத்தில் சிஓடி 186 எம்ஜி/1இல் இருந்து 54 எம்ஜி/1 ஆகவும், ஓக்லா தடுப்பணையில் 100 எம்ஜி-1-இல் இருந்து 30 எம்ஜி/1 ஆகவும் குறைந்திருந்தது.

ஜூன் மாதத்தில் ஆற்றின் சில பகுதிகளில் பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்த கரைந்த ஆக்ஸிஜன் (டிஓ) அளவுகள், பல்லா மற்றும் வஜிராபாத் போன்ற இடங்களில் கணிசமாக அதிகரித்தன. இது சிறந்த ஆக்ஸிஜனேற்றத்தைக் குறிக்கிறது என்று அந் த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.தில்லியில் 15 ஆவது தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி அம்பே... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

‘சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேள்’ என பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான... மேலும் பார்க்க

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறை மசோதா: முதல்வா் ரேகா குப்தா தகவல்

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.ஏப்ரல் ... மேலும் பார்க்க

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை முதல்வா் ரேகா குப்தா

‘சஞ்சய் முகாம்’ அல்லது ‘நேரு முகாம்’ போன்ற பெயா்களைக் கொண்ட குடியிருப்புகளை வெறுமனே பெயரிடுவதற்குப் பதிலாக, தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்க... மேலும் பார்க்க

போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பணியிடைநீக்கமான அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க