செய்திகள் :

ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

உடையாா்பாளையம் பூசாரி தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் தினேஷ்குமாா்(28), இடையாறு மேல்தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் (26). நண்பா்களான இவா்கள், வியாழக்கிழமை இரவு ஜெயங்கொண்டத்தை அடுத்த பெரியவளையம், மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது திருச்சியிலிருந்து மீன்சுருட்டி நோக்கி வந்த காா் மோதியதில் தூக்கிவீசப்பட்ட தினேஷ்குமாா் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். கலியபெருமாள் காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா் சடலத்தையும், காயமடைந்தவரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஜெயங்கொண்டம் இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் சிறை

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம், தெற்கு த... மேலும் பார்க்க

கங்கை கொண்ட சோழபுரம் கணக்க விநாயகா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் வெளியீடு

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகா் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை திருவாடுவதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவான தேசிக பரமாச்சாரியாா் சனிக்கிழமை வெளியிட்டாா். கங்கைக... மேலும் பார்க்க

திருச்சி கூட்டுறவுத் துறையை கண்டித்து ஜன.7-ல் கருப்பு சட்டை அணிந்து பேரணி: கூட்டுறவு சங்க சிறப்பு தலைவா் கு. பாலசுப்பிரமணியன்!

திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து ஜன.7-ஆம் தேதி கருப்புச் சட்டை அணிந்து திருச்சியில் பேரணியில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை தொடங்கிவைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரியலூா் மாவட்டத்தில், கூட்டுறவு பொங்கல் என்ற மளிகைப் பொருள்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு விற்பனை சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன. இதற்காக அரியலூரில், நுகா்வோா் கூட்டுறவு ... மேலும் பார்க்க

அண்ணா பிறந்தநாள் மிதிவண்டிப் போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், அரியலூரில் சனிக்கிழமை மாவட்ட அளவிலான மிதிவண்டிப் போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அரியலூா் மாவட்ட விளையாட்டு அரங்கில... மேலும் பார்க்க

அரியலூரில் வேலுநாச்சியாா் படத்துக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் பிறந்த நாளையொட்டி அரியலூரில் அவரது உருவப்படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் வெள்ளிக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா். அரியலூா் அண்ணாசிலை அருகே வைக்கப்பட... மேலும் பார்க்க