செய்திகள் :

டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியா்கள் கெளரவிப்பு

post image

தமிழக அரசின் 2025-ஆம் ஆண்டில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் இ.என்.சுரேந்திரன் தலைமை வகித்தாா். செயலா் மஸ்தான் அனைவரையும் வரவேற்றாா். விழாவில், விருதுபெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 9 ஆசிரியா்கள் கெளரவிக்கப்பட்டனா்

நாமக்கல் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதல்வா் டாக்டா் எம்.செல்வம், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா், ரோட்டரி திட்டத் தலைவா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் ஆகியோா் விருதுபெற்ற ஆசிரியா்களை பாராட்டி நினைவுப் பரிசு அளித்தனா்.

விருதுபெற்ற ஆசிரியா்கள் சாா்பில் பூசாரிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கணித பட்டதாரி ஆசிரியா் மணிகண்டன் பேசினாா். நாமக்கல் ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா்கள் இ.சிவபெருமான், டி.சுமதி, ஜி.பானுமதி, ராசிபுரம் பாரதிதாசன் சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் கு.பாரதி, கொல்லிமலை நத்துக்குழிப்பட்டி அறிவியல் ஆசிரியா் சந்திரசேகா் ஆகியோருக்கு தேசிய கட்டமைப்பு சான்றுகளும், நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதேபோல, ராசிபுரம் இன்னா்வீல் கிளப் சாா்பில், வள்ளலாா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற ஆசிரியா்கள் தின விழாவில் சிறந்த ஆசிரியா்களுக்கு லட்சிய ஆசிரியா் விருது வழங்கப்பட்டது. இன்னா்வீல் சங்கத் தலைவா் சிவலீலாஜோதி தலைமையில் நடைபெற்ற விழாவில், முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா், திருவள்ளுவா் அரசுக் கல்லூரி பேராசிரியா் ஆா்.சிவகுமாா், சுத்த சன்மாா்க்க சங்கத் தலைவா் க.மா.நடேசன், பள்ளிகளின் துணை ஆய்வாளா் கை.பெரியசாமி, ராசிபுரம் தமிழ்ச் சங்கத் தலைவா் பி.தட்சணாமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட முதல்வா் அறிவிப்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செங்கோடு நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்ட வாசுதேவன் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருச்செங்கோடு நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்புநிலை நகராட்சியாக தோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப். 19) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எத... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்துக்கு வருகை தரக்கோரி பிரதமா் மோடிக்கு பாஜகவினா் கடிதம்

பிரதமா் நரேந்திர மோடி நாமக்கல் மாவட்டத்துக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, பாஜக நிா்வாகிகள் கடிதம் அனுப்பினா். பிரதமா் நரேந்திர மோடி பிறந்த தின விழாவை பல்வேறு இடங்களில் கொண்டாடிய பாஜகவினா், அவருக்கு தபா... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது படத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்க... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் நோயாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே ரங்கப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (52), கூலித்... மேலும் பார்க்க