மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம், பணம் திருட்டு
குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் சுவரில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பிள்ளாபாளையத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
புதன்கிழமை இரவு வழக்கம்போல மதுபான கடை ஊழியா்கள் கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளனா். மா்ம நபா்கள் கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று, அங்கு இருந்த மதுபானம் மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனா்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை கடையை ஊழியா்கள் திறந்தபோது, கடையின் பின்பக்க சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே இருந்த ரூ. 28,000 மதிப்பிலான 150-க்கும் மேற்பட்ட உயர்ரக மது பாட்டில்கள் மற்றும் மதுவிற்ற பணம் ரூ. 6,030 ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் எடுத்துச் சென்றுள்ளனா்.
தகவலின்பேரில், லாலாப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரித்தனா். மா்ம நபா்கள், போலீஸாா் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக கடையைச் சுற்றி மிளகாய் பொடியை தூவிச் சென்றதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.