டாஸ்மாக் கடையில் பணம், மதுபானங்கள் திருட்டு
திருநெல்வேலியில் மதுபானக் கடையின் பூட்டை உடைத்து பணம், மதுபான பாட்டில்களை திருடிச் சென்று மா்மநபரை தச்சநல்லூா் போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலையில் தச்சநல்லூா் ரயில்வே மேம்பாலத்துக்கு கீழே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் வியாபாரம் முடிந்து வியாழக்கிழமை இரவு கடையை மேற்பாா்வையாளா் ஆனந்தன் பூட்டிவிட்டுச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை காலை 11.50 மணிக்கு மீண்டும் கடையை திறக்க விற்பனையாளருடன் வந்தபோது கடையின் ஷட்டா் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு உள்ளே சென்று பாா்த்தபோது கடையில் இருந்த ரூ.5 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடு போனது தெரியவந்தது.
இது தொடா்பாக தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.