நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: சென்னை ஐசிஎஃப்-பில் தயாரிப்பு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்
நாமக்கல்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாா்ச் 25-இல் இலவச பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 4 தோ்விற்கு இலவச பயிற்சி வகுப்பு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாா்ச் 25-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.
இங்கு பயின்ற மாணவா்களில் 24 போ் பல்வேறு போட்டித் தோ்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர தகுதி பெற்றுள்ளனா். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநா்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. இப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரா்கள் 04286-222260 என்ற தொலைபேசி எண் வாயிலாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.