செய்திகள் :

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை: ஏப்.1 முதல் புதிய விதிமுறைகள் அமல்: ரிசா்வ் வங்கி

post image

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய கூடுதல் அத்தாட்சிகளை அனுமதிக்கும் புதிய விதிமுறைகளை ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை அறிவித்தது.

அடுத்த ஆண்டு ஏப்.1-ஆம் தேதிமுதல், அந்த விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைக்கு பயனா்களின் அடையாளத்தை உறுதி செய்ய இரு விதமான அத்தாட்சிகளை சமா்ப்பிக்கும் நடைமுறை வேண்டும் என்று வலியுறுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.

அதேவேளையில், பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கும் நடைமுறையை வங்கிகள் உள்ளிட்ட நிதி சேவை நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில், ரிசா்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: ஏப்.1 முதல் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனைகளுக்கு பயனரின் அடையாளத்தை உறுதி செய்ய குறுஞ்செய்தி மூலம் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் (பாஸ்வோ்ட்), கடவுச்சொற்றொடா், கைவிரல் ரேகை அல்லது வேறு எந்தவொரு பயோமெட்ரிக் பதிவு உள்ளிட்டவற்றை அத்தாட்சியாகப் பயன்படுத்தலாம். பயனருக்கு தெரிந்த, பயனா் பயன்படுத்தும் விஷயம் மூலம் அவரின் அடையாளத்தை உறுதி செய்வதற்கான அத்தாட்சியைப் பெறலாம்.

அதிக சிக்கல் கொண்ட பணப் பரிவா்த்தனைகள் குறித்து தெரியப்படுத்தவும், உறுதி செய்யவும் ‘டிஜிலாக்கா்’ தளத்தைப் பயன்படுத்தலாம். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல், பணப் பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால், அதற்கான இழப்பீட்டை வாடிக்கையாளருக்கு ஆட்சேபமோ, தயக்கமோ இல்லாமல் நிதி சேவை நிறுவனங்கள் வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

செயற்கை மழை சோதனை: பாஜக மீது ஆம் ஆத்மி விமா்சனம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த செயற்கை மழையைப் பொழியச் செய்வதற்கான மேக விதைப்பு நடவடிக்கைகள் தொடா்பாக பாஜக தலைமையிலான தில்லி அரசை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்ம... மேலும் பார்க்க

விரைவுத் தபாலில் அனுப்பப்படும் கடவுச்சீட்டை பெறுநரிடம் மட்டுமே வழங்க அஞ்சல் அலுவலா்களுக்கு உத்தரவு

விரைவுத் தபால்கள் மூலம் அனுப்பப்படும் கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) அந்த முகவரியில் குறிப்பிட்டுள்ள பெறுநரிடம் மட்டுமே வழங்க வேண்டும் என அனைத்து தலைமை அலுவலா்களுக்கும் மத்திய தொலைத்தொடா்பு அமைச்சகம் உத்தர... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலராக டி.ராஜா (76) வியாழக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா். பஞ்சாப் மற்றும் ஹரியாணா தலைநகரான சண்டீகரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25-ஆவது தேசிய மாநா... மேலும் பார்க்க

லடாக் வன்முறைக்கு பாஜக அரசே காரணம்: காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டு

‘லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட வன்முறைக்கு ஆளும் பாஜக அரசுதான் காரணம்’ என்று காங்கிரஸ், மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டின. முன்னதாக, இந்த வன்முறைக்கு அரசி... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் இந்தியா மெளனம்: சோனியா காந்தி விமா்சனம்

சுதந்திரத்துக்காகவும், மனித கண்ணியத்துக்காகவும் ஓங்கி ஒலித்த இந்தியாவின் குரல், தற்போது காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் விவகாரத்தில் பெரும் மௌனம் காக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ... மேலும் பார்க்க

செப். 29-இல் தொழிலாளா் வருங்கால வைப்புநிதி சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சாா்பில் சிறப்பு முகாம் தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் செப். 29 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து வருங்கால வைப்புநிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க