செய்திகள் :

டெல்லி: Live-in பார்ட்னரையும் குழந்தையையும் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் ஓட்டம்; சிக்கியது எப்படி?

post image

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்வானி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சோனி (22) என்பவரும், நிகிழ் (24) என்பவரும் சந்தித்துக்கொண்டனர். இச்சந்திப்பு அவர்களுக்குள் நாளடைவில் நட்பை ஏற்படுத்தியது.

இந்த நட்பு காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். இதில் சோனி கர்ப்பமானார். நிதி நிலை மற்றும் திருமணம் செய்து கொள்ளாமை போன்ற காரணங்களால் குழந்தையைக் கலைக்க முடிவு செய்தனர்.

ஆனால் அதற்கான காலம் கடந்துவிட்டது. 2024ம் ஆண்டு சோனிக்குக் குழந்தை பிறந்தது. அவர்கள் குழந்தையை வளர்க்க முடியாது என்பதால் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்பனை செய்தனர்.

இதையடுத்து இரண்டு பேரும் டெல்லியில் குடியேறினர். அங்கு சோனலுக்கு அதே பகுதியில் வசிக்கும் ரேஷ்மி என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது.

இந்த அறிமுகம் காரணமாக அடிக்கடி ரேஷ்மி வீட்டிற்கு சோனல் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ரேஷ்மியின் கணவர் துர்கேஷுடன் சோனலுக்குத் தொடர்பு இருப்பதாக நிகில் சந்தேகப்பட்டார்.

இது தொடர்பாக சோனலுக்கும், நிகலுக்கும் இடையே இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சோனலுக்கும், துர்கேஷுக்கும் இடையே நடந்த வாட்ஸ்ஆப் சாட்டிங்கைப் பார்த்து சோனலுடன் நிகில் அடிக்கடி தகராறு செய்தார்.

இந்நிலையில் சோனல் மீண்டும் கர்ப்பமானார். மீண்டும் குழந்தையைக் கலைக்கவேண்டும் என்று சோனல் தெரிவித்தார். ஆனால் நிகில் இக்குழந்தையைக் கலைக்க வேண்டாம் என்றும் இக்குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கையில் ஷெட்டிலாகலாம் என்றும் நிகில் தெரிவித்தார்.

ஆனால் அதனைக் கேட்காத சோனல் நிகிலுக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று கருவைக் கலைத்தார். இதனால் ரேஷ்மியின் கணவர் சொல்லித்தான் சோனல் கருவைக் கலைத்ததாக நிகில் நம்பினார். எனவே மீண்டும் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

இச்சண்டை முற்றிய நிலையில் சோனல், ரேஷ்மியின் வீட்டிற்குச் சென்று அங்கு வசிக்க ஆரம்பித்தார். ஆனாலும் நிகில் தொடர்ந்து சோனலுடன் தொடர்பில் இருந்தார். அடிக்கடி போன் மூலம் சமாதானமாகப் பேசி மீண்டும் வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் சோனல் வர மறுத்தார்.

இந்நிலையில் ரேஷ்மி தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காகச் சென்றார். ரேஷ்மியின் கணவரும் வெளியில் சென்று இருந்தார். வீட்டில் சோனலும், ரேஷ்மியின் 6 மாத குழந்தையும் தனியாக இருந்தனர்.

அந்நேரம் நிகில் அங்குச் சென்று தன்னுடன் வரும்படி சோனலிடம் கேட்டுக்கொண்டார். நிகில் தன்னுடன் ஆப்ரேசனுக்குப் பயன்படும் பிளேடு ஒன்றையும் எடுத்துச் சென்று இருந்தார். இருவருக்கும் இடையே நடந்த வாய்த்தகராறு முற்றிய நிலையில் சோனல் வாயில் நிகில் டேப் ஒட்டிவிட்டு அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதே போன்று 6 மாத குழந்தையின் வாயிலும் டேப் ஒட்டி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில்,''ரேஷ்மியின் கணவர் சொல்லித்தான் சோனல் தனது கருவைக் கலைத்தார் என்று கருதி அதற்குப் பழிவாங்கும் நோக்கில் குழந்தையையும் நிகில் கொலை செய்துள்ளார்.

நிகில், கொலை செய்யப்பட்ட குழந்தை

கொலை செய்துவிட்டு நிகில் தனது வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்து பழைய டெல்லிக்குச் சென்றார். அங்கிருந்து பரேலிக்குச் சென்று அங்கிருந்து ஹல்வாவுக்குச் சென்று தனது சகோதரிக்குத் தெரிந்த ஒரு நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தார்.

அவர் கொலை செய்துவிட்டுத் தப்பிச்செல்லும்போது யாரும் தன்னைப் பின் தொடரக்கூடாது என்பதற்காக மொபைல் போனையும் சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். ஆனால் அவரது நடமாட்டத்தைக் கண்காணித்து மடக்கிப் பிடித்து கைது செய்தோம்'' என்றார். கைது செய்யப்பட்ட நிகிலிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

ஊட்டி: தாம்பத்யத்திற்கு மறுத்த மனைவி, பெற்ற மகளையே அழைத்த கொடூர தந்தை - அதிர்ச்சி பின்னணி

புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் குடியேறியுள்ளனர். 2 மகன்கள் மற்றும் 2 மகள் உள்ள நிலையில், கணவன் கட்டட வேலையும் மனைவி காட்டேஜ் ஒன்றிலும் பணியாற்றி... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு; பறிமுதல் செய்து காவல்துறை நடவடிக்கை

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுபாட்டுத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் என 1080 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை சார்ந்து நேரடியாகவும்,... மேலும் பார்க்க

முடி வெட்டச் சொன்ன ஆசிரியர்; கத்தியால் குத்திக் கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்கள்! - என்ன நடந்தது?

ஹரியானா மாநிலம் ஹிசாரில் உள்ள பாஸ் பாட்ஷாபூர் கிராமத்தில் கர்தார் நினைவு சீனியர் செகண்டரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் முதல்வராக ஜக்பீர் சிங் (50) பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளியி... மேலும் பார்க்க

ரீல்ஸ் வெளியிட்ட டென்னிஸ் வீராங்கனை; கோபத்தில் சுட்டுக்கொலை செய்த தந்தை.. ஹரியானாவில் அதிர்ச்சி

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் ராதிகா யாதவ்(25). டென்னிஸ் வீராங்கனையானை ராதிகா மாநில அளவில் விளையாடி இருக்கிறார். இரட்டையர் பிரிவில் ராதிகா 113-வது இடத்தில் இருக்கிறார். ராதிகாவிற்கும் ... மேலும் பார்க்க

கோவை: பெண்ணுடன் பகை; தவறாக பேசி வந்த இளைஞர் - 12 இடங்களில் வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

கோவை காரமடை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் (வயது 23). பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பெற்றோர் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர். வீடு சிறியதாக இருப்பதால் சஞ்சய் அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளா... மேலும் பார்க்க

``என் பேரன் என்னைப் பாலியல் வன்கொடுமை செய்தான்" - காவல்நிலையத்தில் மூதாட்டி புகார்; பின்னணி என்ன?

ஹிமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மாவட்டத்தில் ரோஹ்ரு நகரில் 65 வயது மூதாட்டி வசித்து வந்தார். கணவரை இழந்த அவர், தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிம்லா காவல்நிலையத்தில் அந்த மூதாட்ட... மேலும் பார்க்க