ஆர்ஜி கர் பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் பிரதமர் தலையிட கோரிக்கை!
தக்கோலத்தில் சிஐஎஸ்எஃப் ஆண்டு விழா: அமித் ஷா பங்கேற்பு!
அரக்கோணம் அருகே தக்கோலத்தில் நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) 56-ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள சிஐஎஸ்எஃப் பயிற்சி மையத்தில் விழாவில் கலந்துகொள்வதற்காக வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை விமானம் மூலம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தை வந்தடைந்தாா்.
இதையும் படிக்க : ஹிந்தி திணிப்பை மையப்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்ய தயாரா? பாஜகவுக்கு முதல்வர் சவால்
அங்கிருந்து சாலை மாா்க்கமாக தக்கோலம் சிஐஎஸ்எப் மண்டல பயிற்சி மையத்துக்கு சென்ற அமித் ஷா, இன்று காலை தொடங்கிய ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
இந்நிகழ்வில், குஜராத் மற்றும் மேற்குவங்கத்தில் உள்ள கடற்கரையிலிருந்து தொடங்கும் சைக்கிள் பேரணியை மத்திய அமைச்சா் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த சைக்கிள் பேரணி கடற்கரையையொட்டி 25 நாள்கள் பயணித்து மாா்ச் 31-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவடையும்.
மேலும், சிஐஎஸ்எஃப் சாா்பில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.