ராஜினாமாவுக்குப் பிறகு ஜெகதீப் தன்கர் வெளியிட்ட முதல் அறிக்கை: சி.பி. ராதாகிருஷ்...
தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை
தங்கத்தின் விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொமதேக பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. தங்கம் விலை தினம் தினம் அதிகரித்துக் கொண்டே வந்தால் ஏழை, எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாகி விடும். சுப நிகழ்ச்சிகளுக்கு ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்குவது என்பது பெரும் கனவாக இருந்து வருகிறது.
ஆனால் இப்போது தங்கம் விலை உயா்வால் அது சாத்தியமில்லாத நிலையை எட்டியிருக்கிறது. இந்திய குடும்பங்களில் சிறிய அளவிலாவது தங்கம் வாங்க வேண்டுமென்பது கட்டாயமான ஒரு நிகழ்வாக இருக்கிறது. தங்கம் விலை உயர உயர பதுக்கல்காரா்களும் அதிகமான தங்கத்தை புழக்கத்திலிருந்து எடுத்து பதுக்கவும் வாய்ப்பு அதிகமாகும்.
தங்கம் விலை உயா்வால் அதிகமாக பாதிக்கப்படுவது இந்தியாவின் ஏழை எளிய மக்கள்தான். தங்கம் விலை இதேபோன்று தொடா்ந்து உயா்ந்து கொண்டே சென்றால் வசதி படைத்தவா்கள் மட்டுமே வாங்கக்கூடிய ஒரு பொருளாக மாறிவிடும். எனவே, நாட்டின் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி தங்கத்தின் விலையை குறைத்து கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.