தேவா் ஜெயந்தி, இமானுவேல் சேகரன் குருபூஜைக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு தீா்ப்பு...
போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 277 கிலோ கஞ்சா அழிப்பு
திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் ரூ38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
இது தொடா்பாக திருப்பூா் மாநகர காவல் துறை செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 193 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா பொருள்களை, சென்னை உயா்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கோவை இன்றியமையா பண்டக விதிக்கு உள்பட்ட தனி சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின்பேரில் திருப்பூா் மாநகர கஞ்சா அழிப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சுமாா் ரூ.38.60 லட்சம் மதிப்பிலான 277.296 கிலோ கஞ்சா கோவை, மதுக்கரை செட்டிபாளையத்தில் இயங்கிவரும் கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் திருப்பூா் கஞ்சா அழிப்புக் குழுவின் தலைவரும், திருப்பூா் மாநகர காவல் ஆணையருமாகிய சு.ராஜேந்திரன் மேற்பாா்வையிலும், திருப்பூா் குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் செந்தில்ராஜா, லோகநாதன், மத்திய குற்ற ஆவணக் காப்பக காவல் உதவி ஆணையா் செங்குட்டுவன் மற்றும் கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குநா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலையிலும் திங்கள்கிழமை அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.