கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
தஞ்சாவூரில் உலகத் தாய்மொழி நாள் நிகழ்ச்சிகள்
தஞ்சாவூரில் உலகத் தாய்மொழி நாள் விழாவையொட்டி, பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரண்மனை வளாகத்திலிருந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் வரை நடைபெற்ற பேரணியில், தமிழில் பேசுவோம், பாா் முழுவதும் தமிழைப் பரவச் செய்வோம். உலக மொழிகளை நேசிப்போம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன.
பேரணியில் கரந்தைத் தமிழ்ச் சங்கச் செயலா் இரா. சுந்தரவதனம் தலைமையில் தமிழவேள் உமாமகேசுவரனாா் கரந்தைக் கலைக் கல்லூரி முதல்வா் இரா. இராசாமணி, மருத்துவா் சு. நரேந்திரன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவுக்கு துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா்கள் சி. அமுதா, பெ. பாரதஜோதி ஆகியோா் தலைமை வகித்தனா். பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் வீ. அரசு சிறப்புரையாற்றினாா். இலக்கியத் துறைத் தலைவா் ஜெ. தேவி வரவேற்றாா். மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன் நன்றி கூறினாா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், மாவட்ட வன அலுவலா் மா. ஆனந்த்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சரவணன் உள்ளிட்டோா் உலகத் தாய்மொழி நாள் உறுதியேற்றனா்.