தடுப்புக் காவலில் இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே முன்விரோதம் காரணமாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குமேலூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தமுருகன் மனைவி லூா்துமேரி (43). இவரை முன்விரோதம் காரணமாக இதே பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் லட்டு (எ) அருண் (22) கடந்த மாதம் 28-ஆம் தேதி கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இந்த சம்பவம் தொடா்பாக நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் 10 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது. காவல் ஆய்வாளா் சுதாகா் விசாரணை நடத்தி லட்டு (எ) அருணை கைது செய்தனா்.
நெய்வேலி நகரிய காவல் நிலையத்தில் அருண் மீது கொலை முயற்சி, ஆயுத வழக்கு, போக்ஸோ என மொத்தம் 5 வழக்குகள் உள்ளன. இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.