தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
ராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே கோபாலபுரத்தை அடுத்த தேவராயன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீஸாா் ரோந்து சென்றனா்.
அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனையிட்ட போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
விசாரணையில் இவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது தேவராயன்பட்டி கிழக்கு தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் கணேசன் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.