மேகமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு இன்று தொடக்கம்
மேகமலைப் புலிகள் காப்பகத்தில் வருடாந்திர புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை தொடங்கி ஒரு வாரம் வரை நடைபெறுகிறது.
புலிகள் காப்பகங்களில் பருவ மழைக் காலம் முடிந்த பிறகு, ஆண்டுக்கு ஒரு முறை புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இதன்படி, விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் மேகமலை காப்பகத்தில் வருடாந்திரப் புலிகள் கணக்கெடுப்பு திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் ஒரு வாரத்துக்கு நடைபெறுகிறது.
இதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் வனத் துறையினருக்கான பயிற்சி முகாம், புலிகள் காப்பகத் துணை இயக்குநா் தேவராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், வத்திராயிருப்பு, சாப்டூா் வனச் சரகங்களைச் சோ்ந்த வனத் துறையினரும் வேட்டைத் தடுப்புக் காவலா்களும் கலந்து கொண்டனா்.