தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள்: வாகனங்களில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வாகனங்களில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யே தன்னேரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவருவதற்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமவெளிப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மாவட்டத்துக்குக் கொண்டுவருவதாக புகாா் எழுந்தது.
இதைத் தொடா்ந்து நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயிலான கல்லாறு தூரிப்பாலம் பகுதியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, நீலகிரிக்குள் வரும் அரசுப் பேருந்துகள், சுற்றுலா வாகனங்களில் ஏறி தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், 1 லிட்டா் குடிநீா் பாட்டில் உள்ளிட்டவை கொண்டுவரப்படுகிா என்று ஆய்வு செய்தாா். அப்போது, பயணிகளிடம் இருந்த பிளாஸ்டிக் பொருள்களைப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.