ஆரணி: மனைவியை பிரிந்து மாணவி மீது காதல் - அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்; மாணவியின...
தண்டோரா
இறால் வளர்ப்பு
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 28-ம் தேதி முதல் 14 நாள்களுக்கு ‘இறால் வளர்ப்பு நுட்பங்கள்’ பயிற்சி தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது. இறால் பண்ணை அமைத்தல் தொடர்பான குளம் தயாரிப்பு, விதை சேமிப்பு, தீவன மேலாண்மை, அடிப்படை சுகாதார கண்காணிப்பு மற்றும் அறுவடை உள்ளிட்ட விஷயங்களைக் கற்றுக்கொள்ள, இந்தப் பயிற்சி உதவியாக இருக்கும். பன்னிரண்டாம் வகுப்புப் படித்தவர்கள், கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள், தற்போது பண்ணை தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர், இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். முன்பதிவு அவசியம்.
தொலைபேசி: 0461 2903324 | செல்போன்: 94870 78758
தேனீ வளர்ப்பு
கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பயிர்ப் பாதுகாப்பு மையத்தின் கீழ் இயங்கும் வேளாண் பூச்சியியல் துறையில் அக்டோபர் 27-ம் தேதி முதல் 26 நாள்களுக்கு தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் ‘தேனீ வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. வணிக ரீதியில் தேனீ வளர்ப்புக் குறித்த அனைத்து தொழில்நுட்பங்களும் கற்றுத்தரப்படும். வயது வரம்பு 18-35-க்குள் இருத்தல் வேண்டும். முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு 93635 29576, 94868 93905
காளான் வளர்ப்பு
சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 28-ம் தேதி ‘பால் காளான் மற்றும் சிப்பிக் காளான் வளர்ப்பு’, 27 மற்றும் 28-ம் தேதிகளில் ‘பழங்களிலிருந்து ஜாம், ஸ்குவாஷ், பழக்கூழ் தயாரிப்பு’, 29-ம் தேதி ‘சூரிய கூடார உலர்த்தியை அமைத்தல் மற்றும் மானியம் குறித்தான வழிகாட்டல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 94885 75716
கட்டணப் பயிற்சி |
வெள்ளாடு வளர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 28-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.590. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, செல்போன்: 99405 42371





















