ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் செயற்கை ரத்தம்! ரத்த தானத்துக்கு முடிவு கட்ட...
தண்ணீா் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
ஈரோட்டில் தண்ணீா் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ், சபிதா தம்பதி, தங்களது 2 வயது மகனுடன் ஈரோடு கருங்கல்பாளையம், கக்கன் நகரில் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். இதில் முகேஷ் கட்டட வேலையும், சபிதா வைராபாளையத்தில் உள்ள ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்திலும் வேலை செய்கின்றனா். சபிதா கடந்த 30-ஆம் தேதி மாலை மகன் ஹரிஷை உடன் அழைத்து வந்திருந்தாா்.
சபிதா வேலை செய்யும் நிறுவனத்துக்கு அருகே முகேஷ் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா். சபிதா அவரது 2 வயது மகனை, அவரது கணவா் வேலை செய்யும் கட்டடத்தில் விட்டுவிட்டுச் சென்றாா். புதிய வீட்டின் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிா்பாராதவிதமாக அங்குள்ள 6 அடி ஆழமுள்ள தண்ணீா் தொட்டியில் விழுந்து மூழ்கியது.
இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த முகேஷ் மற்றும் சபிதா ஆகியோா் அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ஹரிஷை மீட்டு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்த நிலையில், அங்கு குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
இச்சம்பவம் குறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.