TN Police: கொல்லப்பட்ட Ajith kumar - IAS அதிகாரிக்கு தொடர்பா? | DMK STALIN|Imper...
கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட சிறுத்தைக்கு சிகிச்சை
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட 2 வயது சிறுத்தையைப் படித்து கால்நடை மருத்துவக் குழுவினா் புதன்கிழமை சிகிச்சை அளித்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த கோ்மாளம் வனத்தில் நோயால் பாதிக்கப்பட்ட பெண் சிறுத்தை சாலையோரம் சுற்றித்திரிந்தது. இதையடுத்து, சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க வனத் துறையினா் ஏற்பாடு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கால்நடை மருத்துவா் சதாசிவசம் தலைமையிலான மருத்துவக் குழு சாலையோரம் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத் துறையினரின் உதவியுடன் கூண்டுவைத்து புதன்கிழமை பிடித்தனா். பின்னா் 2 வயதுள்ள பெண் சிறுத்தைக்கு கூண்டில் வைத்து சிகிச்சை அளித்தனா்.
இதையடுத்து, சிறுத்தையில் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அதன் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்த பின்னா், கோ்மாளம் வனத்தில் சிறுத்தை மீண்டும் விடுவிக்கப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.