தேனிலவு கொலையால் ஈர்க்கப்பட்டு.. கணவரைக் கொன்ற பெண்! காரணம்?
பள்ளி வாகனம் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு
அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் பெண் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
அந்தியூரை அடுத்த பருவாச்சி, காந்தி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி சாந்தி (45). கூலித் தொழிலாளா்களான இருவரும் அந்தியூரிலிருந்து அத்தாணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
தாசாரியூா் அருகே சென்றபோது அவ்வழியே சென்ற தனியாா் பள்ளி வாகனம், இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
லேசான காயங்களுடன் பழனிசாமி உயிா் தப்பினாா். இதுகுறித்து, அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.