Edapadi-யிடம் இதை எதிர்பார்க்காத Amit shah... பற்ற வைத்த Annamalai? | Elangovan ...
தனக்குத்தானே விஷ ஊசி செலுத்தி கல்லூரி மாணவா் தற்கொலை
சென்னை கொடுங்கையூரில் தனக்குத்தானே விஷ ஊசி செலுத்தி கல்லூரி மாணவா் தற்கொலை செய்துகொண்டாா்.
கொடுங்கையூா் மூலக்கடை திருவள்ளுவா் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜேசுதாஸ் (20). இவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பி.இ. மூன்றாமாண்டு படித்து வந்தாா். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த ஜேசுதாஸ், அதற்கு இரு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனது அறையில் இருந்த ஜேசுதாஸ், விஷ ஊசி செலுத்திக் கொண்டாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஜேசுதாஸை, அவரது குடும்பத்தினா் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனா். ஆனால் அவா், செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].