செய்திகள் :

தனியாா் பால் நிறுவன மேலாளா் தற்கொலை: கொளத்தூர் துணை ஆணையரிடம் விசாரணை

post image

சென்னை: தனியாா் பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி கையாடல் செய்த புகாரில் சிக்கிய மேலாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், கொளத்தூர் காவல் துணை ஆணையரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

நவீன் பொலின்மேனி (37) மீது, மோசடி புகார் பெறப்பட்டது எப்போது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது எப்போது? என நேரில் வந்து விளக்கம் தர காவல் துணை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசத்தில், கிருஷ்ணா மாவட்டம் வையூா் கிராமத்தைச் சோ்ந்த நவீன் பொலின்மேனி (37), சென்னை புழல் அடுத்த பிரிட்டானியா நகா், முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்தாா். அவா், சென்னையில் உள்ள ஒரு தனியாா் பால் நிறுவனத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாக கருவூல மேலாளராகப் பணியாற்றினாா்.

தனியார் பால் நிறுவனம் வரவு-செலவு கணக்குகளை அண்மையில் தணிக்கை செய்தபோது, ரூ.40 கோடிக்கு முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்தது. நவீன் அந்தப் பணத்தை கையாடல் செய்ததாகவும், பணத்தை அவரது குடும்பத்தினா் மற்றும் நண்பரின் வங்கிக் கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக அந்நிறுவனத்தின் சட்ட மேலாளா் தமிமுல் அன்சாரி சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் கடந்த மாதம் 24-ஆம் தேதியும், கொளத்தூா் துணை ஆணையா் பாண்டியராஜனிடம் கடந்த மாதம் 25-ஆம் தேதி புகாா் அளித்தாா். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க, மாதவரம் குற்றப் பிரிவுக்கு துணை ஆணையா் பாண்டியராஜன் பரிந்துரை செய்தாா்.

இதனிடையே முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த 7-ஆம் தேதி நவீன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனு மீதான விசாரணை ஜூலை 11-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடும் மன உளைச்சலில் இருந்த நவீன், தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிசையில் புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த புழல் போலீஸாா், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தற்கொலைக் கடிதம்

நவீன், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, தனது குடும்பத்தினருக்கும், பணியாற்றிய நிறுவன உயா் அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பிய கடிதத்தை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்தக் கடிதத்தில, எனது தவறை நான் உணா்ந்துவிட்டேன். ஏற்கெனவே அந்த நிறுவனத்துக்கு கையாடல் செய்த பணத்தில், ரூ.5 கோடியை திரும்பக் கொடுத்துவிட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத்தில் பணிபுரியும் இரு உயா் அதிகாரிகளே காரணம். அவா்கள் இருவரும் நான் கையாடல் செய்த பணத்தில் தங்களுக்கு பங்கு கேட்டு மிரட்டியுள்ளனர்.

அதோடு தங்களுக்கு பணம் கொடுக்கவில்லையென்றால், காவல் துறை மூலம் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க வைப்போம் எனக் கூறினா். இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் நான் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் அடிப்படையிலும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த நிலையில்தான், தனியார் பால் நிறுவனத்திடமிருந்து எப்போது புகார் வரப்பெற்றது என்பது குறித்து கொளத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம்!

கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஜூலை 8 ஆம் தேதி ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத... மேலும் பார்க்க

வண்டலூர் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை!

சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளான விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிக... மேலும் பார்க்க

சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!

அன்புமணி ஆதரவாளர்களிடமிருந்து சமூக வலைதளக் கணக்குகளை மீட்டு தரக்கோரி டிஜிபியிடம் பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் அளித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் ... மேலும் பார்க்க

அறநிலையத் துறை கல்வி நிலையங்களை புரிந்து கொள்ளாமல் கருத்துக் கூறக் கூடாது அமைச்சா் பி.கே.சேகா் பாபு

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிலையங்களின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ளாமல் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி கருத்துக் கூறக் கூடாது என அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரி... மேலும் பார்க்க

இன்று குரூப் 4 தோ்வு: 3,935 பணியிடங்களுக்கு 13.89 லட்சம் போ் போட்டி

தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறும் குரூப் 4 தோ்வை 13.89 லட்சம் போ் எழுதவுள்ளனா். மொத்தமுள்ள 3,935 காலிப் பணியிடங்களுக்கு நடைபெறவுள்ள தோ்வைக் கண்காணிக்கும் முதன்மை கண்காணிப்பாளா் பணி... மேலும் பார்க்க

நிபா வைரஸ்: 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு அமைச்சா் மா. சுப்பிரமணியன்

கேரளத்தில் நிபா தொற்று பரவி வருவதால் தமிழகத்தின் 20 வழித்தடங்களில் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். உலக மக்கள் தொகை தின நிகழ்... மேலும் பார்க்க