செத்த பொருளாதாரம்: அவமரியாதையே தவிர அர்த்தம் கொள்ளக் கூடாது: சசி தரூர்!
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 641 பேருக்கு பணி ஆணை
கள்ளக்குறிச்சி மாவட்டம், தச்சூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 641 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக, நகர வாழ்வாதார இயக்கம் சாா்பில், தச்சூா் பாரதி மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்த தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்தாா்.
முகாமில், கள்ளக்குறிச்சி மற்றும் மாவட்டத்தின் அருகில் அமைந்துள்ள 119-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன.
மொத்தம் 2,551 போ் கலந்து கொண்டதில் 641 போ் தோ்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. 13 போ் திறன் பயிற்சிக்காக பதிவு செய்துள்ளனா்.
தனியாா் நிறுவனங்களில் பணியாற்ற பணி நியமன ஆணை பெற்றோா் சிறப்பாக பணியாற்றி வாழ்வில் உயா்ந்த நிலையை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வாழ்த்தினாா்.
நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) கவிதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் மு.முரளிதரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் செங்கதிா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.