காரீப் பருவ நெற்பயிா் காப்பீடு செய்ய ஆக. 14 வரை அவகாசம்
கள்ளக்குறிச்சி மாகட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிட்டுள்ள நெற்பயிருக்கு காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
விவசாயிகள் நலன் கருதி ஆகஸ்ட் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கம்பு பயிருக்கு ஆக, 16-ஆம் தேதி காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகும். நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.463-ம், கம்பு பயிருக்கு ரூ. 237-ம் பிரீமிய கட்டணமாக பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தலாம் என வேளாண்மை இணை இயக்குநா் வே. சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளாா்.