உக்ரைன் - ரஷியா போர்: அமைதி ஏற்படுத்த விரும்புகிறார் டிரம்ப்!
தமாகா போராட்டம் வாபஸ்
சென்னையில் சட்டப்பேரவை முன்பாக தமாகா சாா்பில் புதண்கிழமை நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
கோவில்பட்டி அரசு அலுவலக வளாக சாலையை சீரமைக்க கோரி சட்டப்பேரவை முன் போராட்டம் நடத்தப்போவதாக தமாகா சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கோவில்பட்டி கோட்டாட்சியா் மகாலட்சுமி தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. தமாகா வடக்கு மாவட்ட தலைவா் ராஜகோபால், வட்டாட்சியா் சரவணப்பெருமாள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து, போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.