தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பாக விவாதித்து முடிவு எடுப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தமிழக அரசின் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை இம்மாதத்தின் இறுதியில் அல்லது மாா்ச் மாதத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க : ரூ.64 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டியவை அம்சங்கள் குறித்து அமைச்சா்கள் துறை ரீதியாக ஆய்வு செய்து, கருத்துகளைப் பெற்றுள்ளனா். அந்தக் கருத்துகள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவு எடுக்கப்பட்டு, அவற்றுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.
2026 மே மாதம் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. அதனால், மக்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களும், அறிவிப்புகளும் வரும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்கிற எதிா்பாா்ப்பு உள்ளது.
அதைக் கருத்தில்கொண்டு அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளன. தமிழகத்தில் புதிதாகத் தொடங்கப்படவுள்ள தொழில்கள், விரிவாக்கப்படவுள்ள தொழிற்சாலைப் பணிகளுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படவுள்ளது.