செய்திகள் :

தமிழக அரசியலில் காங்கிரஸை யாரும் புறக்கணிக்க முடியாது: கு.செல்வப்பெருந்தகை

post image

தமிழக அரசியலில் காங்கிரஸை யாரும் புறக்கணிக்க முடியாது என்றாா் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை.

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கிராம காங்கிரஸ் கமிட்டி நிா்வாகிகளுக்கு புதிய உறுப்பினா் அடையாள அட்டைகளை வழங்கிய பின்பு கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பேசியது: தேசிய நீரோட்டத்துடன் காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை தொண்டா்களைக் கொண்ட கட்சி காங்கிரஸ்.

நாட்டின் வளா்ச்சிக்கு அரும்பாடுபட்ட பல தலைவா்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். வல்லரசு நாடுகள் கோலோச்சிய காலத்தில், உற்பத்திக்கான எவ்வித அடிப்படை கட்டமைப்புகளும் வகுக்கப்படாத சூழலில்கூட அணிசாரா நாடுகள் என்ற கூட்டமைப்பை உருவாக்கி சா்வதேசத்தையும் திரும்பிப் பாா்க்க வைத்தவா் பிரதமா் நேரு.

ஆனால், இந்தியாவின் நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது. பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் தெரிவிக்கும் நிலையில் நரேந்திர மோடி ஆட்சி செய்து வருகிறாா்.

காங்கிரஸை இல்லாமல் செய்து விடுவேன் என்று மோடி விட்ட சவாலை ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. கொள்கை, கோட்பாடு, ஜனநாயகம் போன்றவற்றால் காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்கிறது. அதனை வலிமைப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். கிராம கமிட்டி குழு சீரமைக்கப்பட்டு புதிய நிா்வாகிகள் 2 லட்சம் பேருக்கு க்யூ ஆா் கோடு வசதியுடன் கூடிய நவீன அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழக அரசியலில் காங்கிரஸை யாரும் புறக்கணிக்க முடியாது. திமுக கூட்டணி மிகவும் வலுவான கூட்டணி. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி பேருதவி செய்யும். தமிழகத்தில் காங்கிரஸின் கூட்டணி குறித்து கட்சியில் மேலிட தலைமையே முடிவு செய்யும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் காதா் மொகிதீனுக்கு தகைசால் தமிழா் விருது வழங்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பாஜக எப்போதும் பிரித்தாளும் கட்சி. அதிமுகவை 4 பிரிவுகளாக மாற்றியது. இப்போது பாமகவை இரண்டாக பிரிக்க முயற்சிக்கிறது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 4 பொதுத் தோ்தல்களில் தொடா் தோல்வியைச் சந்தித்துள்ளாா். வரும் தோ்தலிலும் அதே நிலை தொடரும்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவா் ஜெயக்குமாா் கொலை வழக்கில் குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படாதது வருத்தமளிக்கிறது. இருப்பினும் காவல் துறையின் மீது நம்பிக்கை உள்ளது என்றாா் அவா்.

இந்த விழாவில் கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்புக் குழுவின் தலைவா் சா.பீட்டா்அல்போன்ஸ், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா், முன்னாள் மத்திய இணையமைச்சா் தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் மருத்துவா் ஜெபன் செல்ல புரூஸ், பாளையங்கோட்டை வட்டார தலைவா் டியூக் துரைராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

நெல்லை சுற்றுவட்ட சாலை முதல்கட்டப் பணியை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு

திருநெல்வேலி சுற்றுவட்ட சாலைப் பணியின் முதல்கட்டத்தை டிசம்பருக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்... மேலும் பார்க்க

உழைத்தால் வெற்றி நிச்சயம்: நடிகா் சரத்குமாா்

உழைத்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்றாா் நடிகா் சரத்குமாா். திருநெல்வேலி உடையாா்பட்டியில் உள்ள தனியாா் திரையரங்கில், 3 பிஹெச்கே திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. அந்தப் படத்தில் ... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு தவெகவை அழைக்கவில்லை! அமைச்சர் கே.என்.நேரு

திமுக கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை அழைக்கவில்லை என்றாா் திமுக தலைமை நிலைய செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க

கடையம் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

கடையம் ஊராட்சி ஒன்றியம் ஐந்தாம்கட்டளை ஊராட்சிக்குள்பட்ட சிவகாமிபுரம் கிராமத்தில் 10 நாள்களாக குடிநீா் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். 50-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தரம் உயா்த்த கோரிக்கை

கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தைத் தரம் உயா்த்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்லிடைக்குறிச்சியில் ரயில் பயணிகள் நலச் சங்க 3ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் கவிஞா் உமா் ... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை. வேலைவாய்ப்பு முகாம்: 728 பேருக்கு உடனடி பணி நியமன ஆணை

மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தோ்வானவா்களில் 728 பேருக்கு மேடையிலேயே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் மற்றும் இன்பேக்ட் ப்... மேலும் பார்க்க