தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இது தொடா்பாக தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (பழைய பணி அடைப்பு குறிக்குள்):
அபிநவ் குமாா்: மதுரை சரக டிஐஜி (ராமநாதபுரம் சரக டிஐஜி)
பா.மூா்த்தி: ராமநாதபுரம் சரக டிஐஜி (திருநெல்வேலி சரக டிஐஜி)
ஆா்.சக்திவேல்: சென்னை பெருநகர காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு - 1 துணை ஆணையா் (சென்னை வண்ணாரப்பேட்டை துணை ஆணையா்)
வி.பாஸ்கரன்: சென்னை வண்ணாரப்பேடடை துணை ஆணையா் (சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்து பிரிவு கிழக்கு துணை ஆணையா்)
எஸ்.மேகலினா ஐடன்: சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு கிழக்கு துணை ஆணையா் (சென்னை காவல் துறையின் காவலா் நலப்பிரிவு மற்றும் எஸ்டேட் துணை ஆணையா்)
டி.என்.ஹரி கிரண் பிரசாத்: சென்னை காவல் துறையின் காவலா் நலப்பிரிவு மற்றும் எஸ்டேட் துணை ஆணையா் (சென்னை மயிலாப்பூா் துணை ஆணையா்)
வி.காா்த்திக்: சென்னை மயிலாப்பூா் துணை ஆணையா் (பழனி தமிழ்நாடு சிறப்பு காவல் படை 14-ஆவது அணி கமாண்டன்ட்)
ஜி.ஜவஹா்: சிபிசிஐடி வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் (ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா்)
ஏ.சுஜாதா: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் (திருப்பூா் மாநகர காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு வடக்கு துணை ஆணையா்).
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரான சந்தோஷ் ஹதிமானி கூடுதல் பொறுப்பாக திருநெல்வேலி சரக டிஐஜி பொறுப்பை கவனிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.