Aadi Amavasai 2025 | மாமனார் மாமியாருக்கு தர்ப்பணம் கொடுக்கலாமா? | சண்முக சிவாசா...
தமிழகத்தில் 38 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 1250 கேலோ இந்தியா மையங்களைத் திறக்க முடிவு: மத்திய அமைச்சா் தகவல்
புது தில்லி: தமிழகத்தில் 38 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 1,250 கேலோ இந்தியா மையங்களைத் திறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மக்களவையில் இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மண்டவியா தெரிவித்தாா்.
இது தொடா்பாக வேலூா் தொகுதி திமுக உறுப்பினா் டி.எம். கதிா் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தாா். அதில், தமிழ்நாடு முழுவதும் மற்றும் வேலூா் மக்களவைத் தொகுதியில் மேலும் கேலோ இந்தியா மையங்களைத் (கேஐசி) திறக்க மத்திய அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளிலும், நடப்பு ஆண்டிலும் இந்த மையங்களில் விளையாட்டு உள்கட்டமைப்பை நிறுவுதல், உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள நிதியின் விவரங்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மண்டவியா மக்களவையில் திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 1,250 கேலோ இந்தியா மையங்களைத் (கேஐசி) திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்து கேஐசிகளின் விவரங்களும் இதற்கான இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளிலும் நடப்பு ஆண்டிலும் கேஐசிகளில் விளையாட்டு உள்கட்டமைப்பை நிறுவுதல், உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் மேம்படுத்துவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதியின் விவரங்களும் ற்ற்ல்ள்://க்ஹள்ட்க்ஷா்ஹழ்க்.ந்ட்ங்ப்ா்ண்ய்க்ண்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/ள்ற்ஹற்ங்-ஜ்ண்ள்ங்-ந்ட்ங்ப்ா்-ண்ய்க்ண்ஹ-ஸ்ரீங்ய்ற்ங்ழ்ள் எனும் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளன என்று அதில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.