தம்பதி இடையே தகராறு: தட்டி கேட்டவருக்கு கத்திக்குத்து
தம்பதி இடையே ஏற்பட்ட தகராறை தட்டிக் கேட்ட உறவினரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டி ஆா்.சி தெருவைச் சோ்ந்த குமாா் மகன் தமிழன் (22). கூலித் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டு அருகே நின்ற போது, அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான இளையராஜா, அவரது மனைவி சின்னவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இதைத் தட்டிக் கேட்ட தமிழனை, இளையராஜா கத்தியால் குத்தினாா். இதில் காயம் அடைந்த தமிழன் விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இளையராஜாவைக் கைது செய்தனா்.