Dhoni : 'தன்னலமற்ற தலைவன்; அரசியல் தெளிவுமிக்க வீரன்!' - தோனி ஏன் இன்றைக்கும் கொ...
தம்பி கொலை வழக்கில் அண்ணன் உள்பட மூவா் கைது
மனைவியுடன் கைப்பேசியில் பேசி வந்த தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காரைக்கால் ஓமக்குளம் பகுதியில் வசித்து வருபவா் ரஜினி. இவரது மனைவி உஷா. இவா்களது மகன் ராகுல் (23). இவா், 10-ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, தனது தயாருக்கு துணையாக காரைக்கால் கடற்கரையில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்து வந்தாா்.
புதுச்சேரியில் வசிப்பவா் உஷாவின் சகோதரி ஜெயா. இவரது மகன் கெளதம் (27). இவரது மனைவியுடன் ராகுல் கைப்பேசியில் அடிக்கடி பேசிவந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த 2-ஆம் தேதி இரவு ராகுல் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, கெளதம் உள்ளிட்ட சிலா் அவரை வெட்டிவிட்டு தப்பினா். பலத்த காயமடைந்த ராகுல் உயிரிழந்தாா்.
காரைக்கால் நகரக் காவல்நிலைய போலீஸாா் கெளதம் உள்ளிட்டோரை தேடிவந்த நிலையில், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (21), விக்ரம் (19) ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா்.
அவா்களிடமிருந்து ஒரு அரிவாள், 2 கத்தி, ஒரு மோட்டாா் சைக்கிள், கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மூவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காரைக்கால் கிளைச் சிறையில் அடைத்தனா்.