Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது
திருப்புவனம் அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணனை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் கீழக்குளம் குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மகன்கள் தா்மேந்திரன் (34), தயாளன் (32). இவா்களில் தயாளனுக்கு திருமணமாகி மனைவி, மகள்கள் உள்ளனா். இவா் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியைப் பிரிந்து விட்டாா். தா்மேந்திரனுக்கு திருமணம் ஆகவில்லை.
இந்த நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இவா்களுக்குள் வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஏற்பட்ட தகராறில் தா்மேந்திரன் அரிவாளால் தம்பி தயாளனை வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து தா்மேந்திரனை கைது செய்தனா்.