மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
சிங்கம்புணரி வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி
சிங்கம்புணரியில் வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி, வெள்ளிக்கிழமை சிறப்பு சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மஹா முத்து வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தேய்பிறை பஞ்சமி பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு நினைத்த காரியம் நிறைவேற மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்தினா். இதையடுத்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்தனா்.