திருப்புவனத்தில் புதிய தூய்மை வாகன சேவை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் புதிய தூய்மை வாகனத்தின் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தப் பேரூராட்சியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள தூய்மை வாகனங்களுடன் கூடுதல் தேவைக்காக புதிய தூய்மை வாகனம் வாங்கப்பட்டது. இதையடுத்து இந்த வாகனத்தின் சேவையை பேரூராட்சித் தலைவா் த. சேங்கைமாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்வில் பேரூராட்சி துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், தலைமை எழுத்தா் நாகராஜன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள், துப்புரவு ஆய்வாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.