எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
குன்றக்குடி அடிகளாா் சிலை திறப்பு: அமைச்சா்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளாா் திருவுருவச் சிலையை அமைச்சா்கள் பி.கே. சேகா்பாபு, கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் திறந்துவைத்தனா்.
குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விழாவையொட்டி குன்றக்குடியில் நடைபெற்ற இந்த விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஆகியோா் பங்கேற்று குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலையையும், அருளாலய கல்வெட்டையும் திறந்துவைத்தனா்.
இதற்கு தருமபுர ஆதீனம், பாலமுருகன் அடிமை சுவாமிகள், சிவாலயம் ஜெ. மோகன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்கு தருமபுர ஆதீனம் தலைமை வகித்தாா். பேராசிரியா் பா. சுந்தா் எழுதிய குன்றக்குடி அடிகளாா் பணிகள், மேடைத்தென்றல் ஆகிய நூல்களை அமைச்சா்கள் வெளியிட்டனா்.
மேலும், குன்றக்குடி அடிகளாா் நூற்றாண்டு விருதுகள் அமைச்சா்களுக்கும், ஆன்மிக அன்பா்களுக்கும் வழங்கப்பட்டன. விழாவை பேராசிரியா் கிருங்கை சேதுபதி தொகுத்து வழங்கினாா்.
முன்னதாக, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் உதவியாளா் கி. சிங்காரவடிவேல் வரவேற்றாா். நோ்முக உதவியாளா் சு. செல்வராஜ் நன்றி கூறினாா்.